--- --:--:-- --

முகநூல் மூலம் பழகி மோசடி செய்த பெண் சிக்கியது எப்படி..?

2

விருதுநகர் சிவகாசியில் கூட்டுறவு வங்கியில் தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கலாம் எனக் கூறிய பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

 

முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட பேச்சியம்மாளின் ஆசை வார்த்தையை நம்பி நண்பரை அழைத்து பணத்துடன் ரமேஷ் சிவகாசி சென்றுள்ளார். குறைந்த விலைக்கு தங்க நகைகளை வாங்கலாம் என நைசாக பேசி பணத்தை ரமேஷிடமிருந்து வாங்கிக் கொண்டு பேச்சியம்மாள் தலை மறைவாகியுள்ளார்.

 

பின்னர் ரமேஷ் அளித்த புகார் அடிப்படையில் பேச்சியம்மாளை போலீசார் கைது செய்தனர். பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon