--- --:--:-- --

மலை ரயில் பாதையில் முறிந்து விழுந்த மரம்..!

4

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் இரும்பு ரயில் பாதையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. உதகை குன்னூர் கூடலூர் கோத்தகிரி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

 

இதனால் அவ்வப்போது மரங்கள் முறிந்து விழுகின்றன. குன்னூர் உதகை ரயில் மலை பாதையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் தாமதமாக இயக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் இரும்பு பாதையில் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

 

இதனால் காலை 9.20 மணிக்கு உதகை செல்ல வேண்டிய ரயில் 10.45க்கு தாமதமாக சென்று சேர்ந்தது.

 

Right Menu Icon