--- --:--:-- --

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அலறி அடித்து ஓடிய நடிகை டாப்ஸி..!

11

டிகர் தனுஷிற்கு பெரிய ரீச் கொடுத்த ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் டாப்ஸி. சமீபகாலமாக தென்னிந்திய மொழி படங்களை விட பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த சாண்ட் கி அங்கா, தப்பாட், ராஷ்மி ராக்கெட், தூபார பிளர், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

 

படங்களில் நடிப்பதை தாண்டி டாப்ஸி நிறைய சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அண்மையில் கூட திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய போது, இன்னும் நான் கர்ப்பமாக ஆகவில்லை என கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதாவது கர்ப்பமான பின்பே திருமணம் செய்து கொள்வேன் என்பது போல் தெரிவித்திருந்தார்.

 

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பார்ட்டி பேப்பரை முறுக்கி உடைக்க, அது வெடித்த சத்தத்தை கேட்டு, டாப்ஸி அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோவை டாப்ஸியே தனது டுவிட்டரில் ஷேர் செய்ய வைரலாகி வருகிறது.

Right Menu Icon