கோயில் தேர் திருவிழா.. பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்..!
புதுக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அறந்தாங்கி மாகாளியம்மன் கோயிலில் நடந்த தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி பெரு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளாக நடைபெற்ற தேர் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.
அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் அருகே அங்கிருந்த இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கினார். இது பலரையும் வெகுவாக கவர்ந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





