மத்திய அரசுக்கு எதிராக இன்று மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்..!
மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் இன்று எதிர் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடங்குகிறது.
தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரத்தில் இரு அவைகளையும் எதிர்கட்சிகளும் முடக்கி வருகின்றன. இந்த சூழலில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்பொழுது மணிப்பூர் வன்முறை தொடர்பாக அவையில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அதுவரை போராட்டம் தொடரும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் மக்களவையில் மத்திய அரசு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கையை பிரதமர் பரிசீலிக்கவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





