சாலை வசதி இல்லாததால் நோயாளியை தூக்கிச் செல்ல நேர்ந்த அவலம்..!
தெலுங்கானாவில் மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் நோயாளியை டோலி கட்டி ஆற்றினை கடந்து தூக்கி சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. சீதாராமபுரம் கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
இதனால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோராறுகளால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் லட்சுமியா என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் சாலை வசதி இல்லாததால் இரு கம்புகளுக்கும் இடையே டோலியைக் கட்டி அவரை படுக்க வைத்து அந்த பகுதி மக்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். இதற்கிடையே தங்கள் கிராமத்தில் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.






