--- --:--:-- --

பிரபல தனியார் கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட மருத்துவ மாணவி..!

10

கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சத்யபிரியா என்பவர் சூலூர் கண்ணம்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

 

மத்திய உணவுக்காக விடுதிக்கு சென்று அவர் பின்னர் கல்லூரி வகுப்புக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் சத்யபிரியாவை தேடி விடுதிக்கு சென்ற பொழுது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சத்ய பிரியாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon