--- --:--:-- --

மலையகத் தமிழர்களுக்காக ரூ.75 கோடியில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

1

லையகத் தமிழர்களுக்கு 75 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திறங்கிய ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து இருநாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து இலங்கையில் வாழும் மலையக தமிழர்களின் நலனுக்காக 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

 

மலையக தமிழர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு நிச்சயம் ஈடுபடும் என்று தான் நம்புவதாக பிரதமர் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்தியா தொடர்ந்து நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

 

Right Menu Icon