பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்..!
தமிழகத்தின் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை ஆளுநருக்கும், அரசுக்கும் இடையிலான உரசல் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் என தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் கூட உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் தொடங்கினர். அதிரடி சோதனை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டசபையை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இது குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.





