--- --:--:-- --

2 மாதத்தில் சலித்த லிவிங் வாழ்க்கை.. காதலியை சிக்க வைத்த காதலன்..!

9

கேரள மாநிலம் இடுக்கியில் திருமண பந்தத்தை மீறி உறவில் இருந்த பெண்ணை கழட்டி விட முயன்ற நபர் தானே போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள கண்ணம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயன்.

 

திருமணம் ஆன இவர் முகநூல் மூலம் அறிமுகமான திருமணமான பெண்ணுடன் நட்பு கொண்டிருந்துள்ளார். இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக வீடியோ எடுத்து தங்கி இருந்த நிலையில் அந்த பெண்ணை ஒரு லாஜிற்கு அழைத்து சென்று 300 மில்லி கிராம் போதை பொருளை அவரது கைப்பையில் மறைத்து வைத்துள்ளார்.

 

பின்னர் கலால் துறை போலீசாருக்கு இந்த தகவலை கூறிவிட்டு ஜெயின் தலைமறைவானார். இதனிடையே கலால் துறை நடத்திய சோதனையில் அந்த பெண்ணிற்கும் போதைப் பொருளுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது.

 

தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்த பொழுது போன் செய்தவர் ஜெயின் என்பது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பெண் தோழியை கழட்டி விடுவதற்காக போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon