ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட கோளாறு.. 3 மணி நேரமாக தலைகீழாக தொங்கிய பயணிகள்..!
அமெரிக்காவில் விஸ்கான்சில் மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஓடிக்கொண்டிருந்த ரோலர் கோஸ்டரில் இயந்திர கோளாறு காரணமாக அந்தரத்தில் பழுதாகி நின்றது.
இதனால் அதில் பயணம் செய்த எட்டு பேர் சில மணி நேரங்கள் தலைகீழாக அந்தரத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரையில் இருந்து 100 அடி உயரத்திற்கு மேல் ரோலர் கோஸ்டர் சென்றதால் அதற்கு ஏற்ப சாதனங்களை கொண்டு வந்து மீட்பு நடவடிக்கைகளை தொடங்க இரண்டு மணி நேரம் ஆகின.
மூன்று நகரங்களை சேர்ந்த வீரர்கள் மீட்டு பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.






