ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடக வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
சொத்து மதிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வழக்கறிஞர் ஒருவரை கர்நாடகா அரசு நியமனம் செய்தது. அப்பொழுது ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், மாணிக்கம், மரகதம், முத்துக்கள், மற்றும் பழவண்ண கற்கள் என முப்பது கிலோ நகைகள் மட்டுமே கருவூலத்தில் உள்ளதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் விலை மதிப்புடைய கடிகாரம் 11 ஆயிரம் புடவைகள் பரிசு பொருட்கள் உட்பட 28 பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்படைக்கவில்லை என தெரிகிறது.
எனவே பறிமுதல் செய்யப்பட்ட 22 வகையான பொருட்களையும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்ற ஆவணங்களுடன் ஒப்படைக்க வழக்கறிஞர் லஞ்சி ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.






