சாய்பாபாவுக்கு மது பாட்டில்களில் தேநீர் அபிஷேகம் செய்த பக்தர்கள்..!
ஆந்திர மாநிலத்தில் சாய்பாபா சிலைக்கு மதுபான பாட்டில்களில் தேனீர் நிரப்பி அபிஷேகம் செய்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. குரு பௌர்ணமியை ஒட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக மேற்கு கோதாவரி மாவட்டம் நச்சந்தைமாபுரம் கிராமத்தில் உள்ள சாய்பாபா கோயிலிலும் வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது சிலர் மது பாட்டில்களில் தேநீர் நிரப்பி அபிஷேகம் செய்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.






