--- --:--:-- --

திருமணமான பெண்ணை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்…!

3

திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மோகன்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார்.

 

இதனை தெரிந்துகொண்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். திருமணமான பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த இளைஞன் சாதி குறித்து திட்டி ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

 

இச்சம்பவம் ஜூன் மாதம் 2ஆம் தேதி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோவுக்கு பயந்து அந்த பெண் பிளாக்மெயிலுக்கு அடிபணிந்துள்ளார். அந்த வாலிபர் இதையே சாக்காக வைத்து அந்த பெண்ணை தனது காம இச்சைக்கு பலியாக்கியுள்ளார்.

 

பல நாள்கள் கடந்தும் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை வாலிபர் டெலிட் செய்யாமல் மிரட்டிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒரு கட்டத்தில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் இதை தெரிவித்தார்.

 

இதைத் தொடர்ந்து குடும்பத்தாரின் துணையுடன் பாதிக்கப்பட்ட பெண் மோகன்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறை தரப்பு நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்காக இது இருந்தாலும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குப் பதிலாக காவல்துறை இந்த புகாரை ஒடுக்க முயல்கிறது என்று குற்றம்சாட்டினார்.

 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி அஜய் குமார் சிங் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தான் இந்த விவகாரம் காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு, முழு விவகாரத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Right Menu Icon