--- --:--:-- --

பான் – ஆதார் இணைப்பு… வருமான வரித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

5

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், இதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2023 தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இணைப்புக்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நீட்டிக்குமா, இல்லையா என்று பலரும் ஊகித்து வருகின்றனர்.

தற்போது வரை ​​காலக்கெடு நீடிப்பு குறித்து வருமான வரித்துறை தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அதேவேளை வருமான வரித்துறை வெள்ளிக்கிழமை அன்று புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. ஆதார் இணைப்புக்கான கட்டணம் செலுத்திய பிறகு பான் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் சலான்களை பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக வருமான வரித்துறை ட்விட்டர் பதிவு மூலம் அறிக்கையில் தெளிவுபடுத்தியது.

பான் வைத்திருப்பவர்கள் பான்-ஆதார் இணைப்பிற்கான கட்டணத்தை செலுத்திய பிறகு சலான் பதிவிறக்குவதில் சிரமங்களை எதிர்கொள்வதைக் காணலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வருமான வரி போர்ட்டலில் உள்நுழைந்த பிறகு, ‘இ-பே டேக்ஸ்’ டேப்பில் சலான் செலுத்தும் நிலையை சரிபார்க்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பணம் செலுத்துவது வெற்றிகரமாக இருந்தால், பான் வைத்திருப்பவர் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையைத் தொடரலாம்.

பான் கார்டு வைத்திருப்பவர்கள் பணம் செலுத்தி ஒப்புதல் அளித்திருந்தாலும், ஜூன் 30, 2023 வரை இணைக்கப்படாத சந்தர்ப்பத்தில் அவர்களின் வழக்குகள் வருமான வரித் துறையால் பரிசீலிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பான் எண்ணில் ஆதார் இணைத்தவர்கள் சலான் ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை ஏதும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் வைத்திருப்பவர் வெற்றிகரமாக பணம் செலுத்தியவுடன், சலான் நகலுடன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் அதை தனியாக பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என விதி ஜூலை 1, 2017 முதல் அமலுக்கு வந்துள்ளது. பல முறை இதன் காலக்கெடு நீடிக்கப்பட்டு இறுதியாக 30 ஜூன் 2023 உடன் நிறைவுக்கு வந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஜூன் 30, 2023க்குள் ஒருவரால் தனது ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க முடியவில்லை எனும் பட்சத்தில் பிற்காலத்தில் அதை இணைக்க விரும்பினால் வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்திய பிறகு இரண்டையும் இணைக்கலாம்.

Right Menu Icon