--- --:--:-- --

பல்பு மாட்ட மின்கம்பத்தில் ஏறிய மின் ஊழியர்.. அப்படியே சாய்ந்த மின்கம்பத்தால் அதிர்ச்சி..!

6

ர்மபுரி அருகே பழுதான மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்களிலே பழுதான மின்கம்பிகளை அகற்றி புதிய மின் விளக்குகள் குறித்து பணி நடைபெற்றது.

 

இந்நிலையில் மின்விளக்கு மாற்றியமைக்க மின் ஊழியர்கள் கம்பத்தில் ஏறிய பொழுது பழுதான மின்கம்பம் திடீரென சாய்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மின் அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது.

 

எனவே உயிர் சேதம் ஏற்படும் முன் மின்கம்பம் மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon