காதலியை திருமணம் செய்ய அம்மாவை நடுரோட்டில் விட்டு ஓடிய இளைஞர்..!
கள்ளக்குறிச்சி அருகே காதலர்கள் மாயமான விவகாரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் கிடைத்ததால் இளைஞரின் தாயை பெண் வீட்டார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்கராபுரம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் மாற்று சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார் இருவரையும் கண்டித்து வந்துள்ளனர்.
எனினும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காதலியுடன் சூர்யா தலைமறைவானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இருவரையும் பெண் வீட்டார் தேடிவந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்கள் பெண் வீட்டாருக்கு கிடைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்தவர்கள் சூர்யாவின் தாயிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து தரையில் தரதரவென இழுத்துச் சென்றது அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதன் காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பெண் வீட்டார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





