--- --:--:-- --

பெண்ணுடன் வந்த இளைஞர்கள் அருவியில் குளித்த போது நேர்ந்த சோகம்..!

9

நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் பெரியமங்கலம் பகுதியில் உள்ள அருவியில் குளிப்பதற்காக ஊட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு பேர் காரில் வந்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மூன்று பேரும் நீரில் மூழ்கி தத்தளித்ததாக தெரிகிறது. இதனைக் கண்ட அவர்களுடன் வந்த ஆர்த்தி என்ற பெண் கூச்சலிட தொடங்கியுள்ளார். இதனையடுத்து பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் இரண்டு இளைஞர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

 

மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இளைஞர்களுடன் வந்த பெண் யார்? இளைஞர்களுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு? குளிக்குச் சென்றவர்கள் எதற்காக பேண்ட் சட்டை அணிந்து இறங்கினார்கள் என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon