--- --:--:-- --

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷா கார்… திடீரென ஏற்பட்ட மின்தடையால் பரபரப்பு..!

1

சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வின் கார் வெளியே வந்தவுடன், மின்தடை ஏற்பட்டு தெரு விளக்குகள் அணைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சென்னை விமானநிலையத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கார் வெளியே வந்த போது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த மின் விளக்குகள் அணைந்தன.இந்நிலையில், காரில் இருந்து இறங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அமைச்சர் புறப்பட்டு சென்றதும், மின் தடையை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவல் அறிந்து விரைந்த மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, போரூர் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், காற்று காரணமாக, மின்தடை ஏற்பட்டது என்றார்.

 

அமித்ஷா பயணத்தின் போது ஏற்பட்ட மின்தடையை அரசியலாக்க விரும்பவில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மின்வாரியம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

 

உள்துறை அமைச்சர் பயணத்தின் போது நிகழ்ந்த மின்தடை குறித்து இன்று விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்படும் என்று லக்கானி கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon