--- --:--:-- --

கத்தியால் வெட்டிவிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்த காதலன்..!

2

ன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் காதலித்த பெண்ணை வெட்டுக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற இளைஞன் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் டெனிஷா. இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக டெனிஷா, வெர்ஜின் ஜோஸ்வாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தருவதாக மார்த்தாண்டம் அருகே பழைய பெப்சி கம்பெனி பின்புறம் உள்ள தென்னை தோப்பிற்கு வரவழைத்து மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சராமரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று உள்ளான்.

\

சத்தம் கேட்கவே பொதுமக்கள் டெனிஷாவை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மார்தாண்டம் போலீசார் வெர்ஜின் ஜோஸ்வாவை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் காதலன் வெர்ஜின் ஜோஸ்வா மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் ரயில் தண்டாளத்தில் ஓடும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர். காதலன் காதலியை வெட்டி கொலை செய்ய முயன்ற பிறகு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதிில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon