திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் சேலம் கிழக்கு, சேலம் மத்திய மேற்கு மாவட்டம் உட்பட்ட மாவட்டங்கள் மாநகர ஒன்றிய நகர மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





