பெண்ணுக்கு மயக்க மாத்திரை கொடுத்து நகைகளை திருடிய போலி டாக்டர்..!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள விடுதியில் பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாக மயக்க மாத்திரை கொடுத்து போலி மருத்துவர் தங்க நகைகளை திருடி சென்றுள்ளார்.
ரயிலில் பயணித்த பெண்ணிடம் தன்னை எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் அந்தப் பெண்ணுக்கு உடல் நலக்குறைவால் சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்.
அதனை நம்பி விடுதிக்கு சென்ற பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்த அந்த நபர் தங்க நகைகளை திருடி தப்பி ஓடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





