சிறையில் வாடும் மனீஸ் சிசோடியாவை நினைத்து கண்கலங்கிய கெஜ்ரிவால்..!
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் துணை முதலமைச்சர் சிசோடியாவை நினைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண் கலங்கினார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பை தொடர்ந்து அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள சிசோடியா தற்பொழுது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் கல்வித்துறை சாதனை நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிசோடியாவை நினைத்து கண்கலங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





