பத்து நாட்களுக்குப் பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி..!
தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க பத்து நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு செல்ல கடந்த 28ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது.
தற்பொழுது அரிசி கொம்பன் பிடிக்கப்பட்ட நிலையில் சுருளி அருவிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை கம்பம் கிழக்கு வனத்துறை விளக்கிக் கொண்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனுமதி வழங்கப்பட்ட முதல் நாள் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குவிந்து வந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





