--- --:--:-- --

பிரியாணியில் கிடந்த புழு.. அதிர்ந்து போன வாடிக்கையாளர்..!

8

ராமநாதபுரத்தில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர்களை புகாரின் பேரில் உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அனிபா பிரியாணியின் அந்த உணவகத்தில் கோவையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பிரியாணி வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.

 

அப்பொழுது அதில் புழுக்கள் இருந்ததை பார்த்த இருவரும் அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். புழுக்கள் கிடந்தது குறித்து உணவக ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர்கள் உரிய பதிலளிக்காததால் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

விரைந்து வந்த அதிகாரிகள் உணவகம் முழுவதும் ஆய்வு செய்தபின் புழுக்கள் கிடந்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

 

Right Menu Icon