உயிருக்கு போராடிய சிறுமி.. அசுர வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்..!
கேரளாவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் உயிரை காப்பாற்ற 139 கிலோமீட்டர் தூரத்தை 2.30 மணி நேரத்தில் கடந்து ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத நிலையில் உடனடியாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 139 கிலோமீட்டர் கொண்ட எர்ணாகுளத்திற்கு சாதாரணமாக சென்றாலே நான்கு மணி நேரத்திற்கு மேலாகும் என கூறப்படும் நிலையில் கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக சமூக வலைதளங்கள் உள்ளூர் தொலைக்காட்சிகள் வழியே விவரம் பொதுமக்களை சென்றடைந்தது. இதையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு போலீசாரின் சேவையுடன் சுமார் 2:30 மணி நேரத்தில் எர்ணாகுளம் சென்று சேர்ந்ததால் சிறுமியின் உயிர் காக்கப்பட்டது.





