மாத்திரையை மாற்றி கொடுத்ததால் பச்சிளம் குழந்தையின் பரிதாப நிலை..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு தவறான மாத்திரை கொடுக்கப்பட்டதால் நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டு ஏற்பட்டுள்ளது.
மகேஸ்வரன் -செந்தூர் என்று தம்பதிக்கு கடந்த 60 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் காய்ச்சல் வந்தால் கொடுக்க சொல்லி சில மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் இருந்து வாங்கப்பட்ட அந்த மாத்திரைகளை கொடுத்ததிலிருந்து குழந்தையின் கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனை சென்று கேட்ட போது காய்ச்சல் மாத்திரைக்கு பதிலாக தவறுதலாக சளி மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக நரம்பியல் மருத்துவரை பார்க்குமாறு கூறியதாகவும் ஆனால் அங்கு மருத்துவர் இல்லை என கூறியதால் குழந்தையின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்த கோவில்பட்டி அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர், மருத்துவர் சரியான மாத்திரை தான் பரிந்துரைத்துள்ளார் என்றும் மருந்து வழங்கும் இடத்தில் தான் தவறு நடந்து இருக்கிறது எனவும் கூறினார்.





