சீனாவில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி..!
சீனாவின் லியோனின் மாகாணத்தில் கடுமையான சூறாவளி தாக்கியது. பெரும் வேகத்துடன் காற்று சுழன்று அடித்தது. விளைநிலங்களில் இருந்த பயிர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்தன.
சூறாவளி தாக்குதலையடுத்து தீயணைப்பு துறையினர் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் பொது பாதுகாப்பு படைகளுக்கு விரைந்து நிவாரண பணிகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.
சூறாவளியால் சுமார் 100 குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளதாகவும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






