12 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. சேலம், கரூர், திருச்சி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





