பத்தாயிரத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள்.. ஆசிரியர்கள் வேதனை..!
தமிழகம் முழுவதும் போதுமான ஆசிரியர்கள் இல்லாத சூழலில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி இந்த கலந்தாய்வு நடைபெறாமல் பல நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 435 உயர்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களில் இல்லாத நிலை உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் என மூன்று பிரிவுகளிலும் 10 ஆயிரத்துக்கு அதிகமான ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.
பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழலில் வரும் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நீதிமன்ற வழக்குகளின் காரணமாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த முடியவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





