பட்டப் பகலில் ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை..!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி ரயில்வே பாதையில் எம்ஜி புதூர் பகுதியில் இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் பயணிகள் விரைவு ரயில் முன்பாய்ந்து அந்த தம்பதி உயிரை மாய்த்துக்கொண்டனர். போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தற்கொலை செய்து கொண்டது குடியாத்தத்தை அடுத்த அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாய தம்பதியான மோகன் – மல்லிகா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





