யூகோ வங்கி கோவை மண்டல அலுவலகம் சார்பில், இரண்டு நாள் வங்கியாளர் கூட்டம் !!!
கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும், அரசுடமை வங்கியான யூகோ வங்கி கோவை மண்டல அலுவலகம் சார்பில், இரண்டு நாள் வங்கியாளர் கூட்டம் கோவையில் நடைபெற்றது.
மத்திய அரசின் நிதியமைச்சகம் சார்பில் நிதி சேவை துறை அளித்துள்ள வழிகாட்டுதலின்படி யூகோ வங்கியின் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் தேசிய அளவில் முன்னிலைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஏற்ப, வங்கி கிளைகள் செயல்பட வேண்டும் என்பதாகும்.

கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கியின் தணிக்கை மற்றும் ஆய்வு பிரிவின் துணைப் பொது மேலாளர் திரு. ஆர்.ஜே சங்கரா மற்றும் கோவை மண்டல அலுவலகத்தின் துணை பொதுமேலாளர் சி.ஏ நாகரத்னா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், மூன்று நிலைகளின் முதல் நிலை தகவல் பரிமாற்றம் கூட்டம் நடந்தது. கோவை மண்டல அளவில் அனைத்து 60 கிளைகளையும் சார்ந்த மேலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள வழிகாட்டுதல்படி 8 விதமான கருத்துக்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதலாம் நிலையில், விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு, மாநில மற்றும் தேசிய அளவில் எடுத்துச் செல்லப்படும் எனவும், இரண்டாவது நிலை கூட்டம் மாநில அளவில் வருகின்ற ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளதாகவும் இறுதி மூன்றாவது நிலை கூட்டம், தேசிய அளவில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.





