கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையால் விபரீத முடிவு..!
கேரள மாநிலத்தில் கண்ணூரில் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு கணவனும் மனைவியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த ஷாஜி, ஸ்ரீஜா ஆகியோர் கடந்த 16ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சாஜி முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே ஷாஜி – ஸ்ரீஜா இடையே சில நாட்களாக தகராறு இருந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜா அவரது இரண்டு மகன்கள், மகளுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






