கோயில் திருவிழாவில் பட்டாசு விபத்தால் பறிபோன இரண்டு உயிர்..!
தர்மபுரி அருகே கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடிப்பு ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழாவினையொட்டி சாமி ஊர்வலம் நடைபெற்றது.
அப்பொழுது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மின்கம்பியில் உரசி சாமி ஊர்வலம் சென்ற வாகனம் மீது விழுந்தது. இதில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. ஆகாஷ் என்று 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.
மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாகன ஓட்டுனரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து மொரப்பூர் காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






