ஆறடி நீள நல்ல பாம்பை பிடித்த வீரர்..!
ஊரப்பாக்கம் அருகே மழை நீர் செல்லும் தொட்டியில் படுத்திருந்த ஆறடி நீளம் உள்ள நல்ல பாம்பினை தீயணைப்பு துறையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் காலனி புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி.
இவரது வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டியில் ஆறு அடி நீளம் நல்ல பாம்பு பதுங்கி இருந்துள்ளது. நபர் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் நல்ல பாம்பினை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.






