விபத்தில் உயிரிழந்த கணவனின் முகத்தை பார்க்க விடாமல் விரட்டியடிக்கப்பட்ட மனைவி..!
வாகன விபத்தில் உயிரிழந்த கணவரின் முகத்தை பார்க்க விடாமல் மனைவி விரட்டியடிக்கப்பட்ட சோகம் கடலூரில் அரங்கேறியுள்ளது. கடலூர் அருகே கான்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி சரண்யா.
இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் குடும்பத்தார் காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். அதில் சாலை விபத்தில் சிக்கி ராஜசேகர் உயிரிழந்த நிலையில் அவருடைய வீட்டில் வைத்து இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளது.
அப்பொழுது கணவர் உயிரிழந்ததை அறிந்து சோகத்தில் மூழ்கிய ராஜசேகரின் மனைவி, சரண்யா அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு கணவரின் முகத்தை காட்ட மறுத்த உறவினர்கள் சரண்யாவையும் அவரது தரப்பினரையும் விரட்டி அடித்தது பரபரப்பு ஏற்படுத்தியது போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி உறவினர்களுடன் மனைவி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.






