--- --:--:-- --

நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்..!

3

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரை கொண்டு நடத்தாமல் பிரதமரை கொண்டு நடத்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

 

28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதற்கு வரவேற்கும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமுதாயங்களிலிருந்து குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோடி தனிமையிலான அரசு உறுதி செய்வது போல அவர்களது செயல்பாடுகள் இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

 

புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசுத் தலைவரால் தான் திறந்து வைக்கப்பட வேண்டுமே தவிர பிரதமரால் அல்ல என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் இதே கருத்தை தெரிவிக்கிறார்கள்.

 

Right Menu Icon