--- --:--:-- --

மல்லிகார்ஜுன கார்கே ராகுலுடன் நிதிஷ்குமார் சந்திப்பு ஏன்..?

4

ருமித்த கருத்துடைய எதிர்க்கட்சித் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். கடந்த ஒன்றரை மாதங்களில் நிகழும் இரண்டாவது சந்திப்பு இது. மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் வியூகம் வகுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

 

மல்லிகார்ஜுன கார்கே தேசம் மீண்டும் ஒருங்கிணைக்கப்படும் என கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விரைவில் ஒருமித்த கருத்துடைய எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அதற்கான தேதி மற்றும் இடம் அறிவிக்கப்படும் யாவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon