கலாஷேத்ரா விவகாரம்..10க்கும் மேற்பட்ட மாணவிகள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம்..!
சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். பாலியல் புகார் தொடர்பாக 162 மாணவிகளிடம் விசாரணை நடத்துமாறு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
அதன் அடிப்படையில் 162 மாணவிகளுக்கும் அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மாணவர்கள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரியின் துணை பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





