வந்தே பாரத் ரயில் மீது இடி, மின்னல் தாக்கியதில் பரபரப்பு..!
ஒடிசாவில் இடி, மின்னல் தாக்கியதில் வந்தே பாரத் ரயில் நின்றது. ஒரிசாவில் ஹவுரா நகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல புறப்பட்டு சென்றது. அந்த ரயில் நிலையம் அருகே வந்த பொழுது நடுவழியில் நின்று விட்டது.
மின்னல் தாக்கியதில் ரயிலில் நேரில் செல்லக்கூடிய மின் கம்பம் பாதிக்கப்பட்டது. ரயிலின் முகப்பு பக்க கண்ணாடி மற்றும் ஓட்டுநரின் அருகில் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் பகுதிகள் ஆகியவை இடி தாக்கியதில் சேதம் அடைந்ததாக ரயில்வே இளைய மேலாளர் தெரிவித்தார்.
ரயிலின் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது என்றும் இதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ரயில் கடந்த 18ஆம் தேதி பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.






