சிறுமியை துடிதுடிக்க கொன்ற சித்தி..!
கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை இரண்டாவது மனைவி தலையணையால் மூச்சு அடக்கிக் கொன்ற சம்பவம் ராணிப்பேட்டையில் அரங்கேறி உள்ளது.
சோளிங்கூர் பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் சந்திரசேகரன் என்ற நபருக்கு சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த இரு மாதங்களில் உடல் நலக்குறைவால் சுமதி உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கிராமத்தில் சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை சந்திரசேகர் இரண்டாவதாக திருமணம் செய்தார். இதனிடையே சந்திரசேகரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை கடந்தாண்டு மே மாதம் மயக்கம் ஏற்பட்டதாக கூறி சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஓராண்டுக்குப்பின் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகிர் தகவல் வெளியாகியுள்ளது. அதில் தலையணை வைத்து அமுக்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராதிகாவையும் உண்மை தெரிந்தும் வெளியே கூறாமல் மறைத்து நாடகம் ஆடி அவரது கணவர் சந்திரசேகரனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





