அடுத்தடுத்து அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி..!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பத்து நாள் பயணமாக வரும் 31ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜூன் 4ம் தேதி நியூயார்க்கின் மேரிஸ் ஸ்கொயர் இன் காந்தனில் சுமார் 5000 இந்திய வம்சா வழியினர் கலந்து கொள்ளும் பேரணியில் பங்கே இருக்கிறார்.
வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவிற்கு பயணம் செய்யும் ராகுல் காந்தி ஸ்டாண்டர்ட் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அங்கு அரசியல்வாதிகள் மற்றும் தொழில் முனைவோரையும் ராகுல் சந்திக்க உள்ளார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.





