மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காந்தி காலமானார்..!
நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட மிக முக்கிய தலைவராக இருந்த மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானர். அவருக்கு வயது 89 ஆகும்.
இந்தியாவின் சுந்தர போராட்ட வரலாற்றை எளிதாகக் காந்திக்கு முன்பு மற்றும் காந்திக்குப் பிறகு எனப் பிரிக்கலாம். அவரது வருகைக்குப் பின்னரே சுதந்திரப் போராட்டம் அடுத்த நிலைக்குச் சென்றது.
எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகலில் கோலாப்பூரில் நடைபெறும் என்று அவரது மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.அருண் காந்தி இன்று தனது 89 வயதில் உயிரிழந்த நிலையில், இதற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




