தமிழ்நாட்டில் ஏப்ரல் 20, 21 ஆம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகியன் தேதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





