அமைச்சர் பங்கேற்ற விழாவில் சோகம்.. 11 பேர் உயிரிழப்பு..!
மும்பையில் மத்திய அமைச்சர், மகாராஷ்டிரா முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில் கடும் வெயிலில் காத்திருந்தவர்களில் 11 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் பிரபல சமூக சேவகர் அப்பாசாமிக்கு மாநிலத்தின் உயரிய விருது வழங்கும் விழா நடைபெற்று வந்தது. திறந்தவெளி மைதானத்தில் நடந்த விழாவில் காலை முதல் மதியம் வரை சுமார் 5 மணி நேரம் ஆயிரக்கணக்கில் பக்தர் காத்திருந்தனர்.
அப்பொழுது வெயிலில் மணி கணக்கில் காத்திருந்தவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். இது துரதிஷ்டவசமானது எனக் கூறியுள்ள முதல்வர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார்.





