--- --:--:-- --

இந்துக்கள் ஓட்டு.. ஆ.ராசா வெச்ச ஆப்பு!  ஆணவப் பேச்சால் குறிப்பிட்ட சாதியினர் அவமதிப்பு…  திமுக தலைமை கடிவாளம் போடாததால் மக்கள் கொதிப்பு!

raja

ஆணவத்துடன் ஏதாவது பேசி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தற்போது பாஜகவினரை தாக்குவதாக நினைத்து, தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதியினரை அவமதித்து பேசியிருப்பது, அந்த சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  திமுக தலைமை, ஆ. ராசாவின் வாய்க்கு பூட்டு போடாவிட்டால், இந்துக்களின் ஓட்டுக்கு வேட்டாக அது அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

 

◼️ ஸ்பெக்ட்ரம் ராசாவும் சர்ச்சைகளும்!

 

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராகவும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் ஆ.ராசா. இவரை பட்டென அடையாளம் தெரியும்படி சொல்வதானால், `2ஜி ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா’ என்று அழைப்பதுண்டு. காரணம், இவர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஏலம் விவகாரத்தில் 2,75,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கைதாகி, டெல்லி திகார் சிறையில் கம்பி எண்ணியவர்.  இந்த வழக்கு மேல் முறையீட்டில் இருந்து வருகிறது.

வழக்கு, கைதுக்கு பின்னர் திமுகவில் செல்லாக்காசான ஆ. ராசா, பின்னர் தனது செல்வாக்கை நிலை நிறுத்த பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். அதன்படி, பொதுவெளியில் சர்ச்சையாக பேசி, மீடியாவில் இடம் பெறுவதும் ஒன்று. மூத்த தலைவராக உள்ள ஆ. ராசா, அதற்குரிய பக்குவமின்றி நடந்து கொள்வதால், அவ்வப்போது திமுக தலைமைக்கு தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார். தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளையே அவர் மதிப்பதில்லை என்றும், குருநில மன்னரைப் போல நடந்துகொள்கிறார் என்றும் தி.மு.க.வினரே, கட்சித் தலைமையிடம் புகார் வாசித்து வருகின்றனர்.

 

அதுமட்டுமின்றி, வாய்த்துடுக்காகவும், ஆணவத்துடன் எதையாவது பேசி, சர்ச்சையை உண்டாக்கி அதன் மூலம் மீடியாக்களின் வெளிச்சத்தை பெற துடிக்கும் அவரது போக்கு, பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். குறிப்பாக, இந்துக்களை தாக்கிப் பேசுவது என்பது, இவருக்கு அல்வா சாப்பிடுவது போலாகும். அதுதவிர, அரசியல் எதிரிகளை நாகரீகமற்ற முறையில் விமர்சனம் செய்து, அருவெறுக்கத்தக்க அரசியல் செய்து வருகிறார்.

உதாரணமாக, கடந்த  2021 சட்டமன்றத் தேர்தலின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி ஆ. ராசா பேசினார். தேர்தல் நேரம் பார்த்து அவர் முதிர்ச்சியின்றி பேசியது, பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. திமுக தலைமையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, `நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது’ என்று அந்தர்பல்டி அடித்தார் ஆ. ராசா.

◼️கடந்தாண்டு  இந்துக்கள் விபச்சாரியின் மகன் என்ற ரீதியில் பேசி, மக்களின் மனங்களில் வெறுப்பைத் தூவினார்.  அவர் தனது பேச்சில், “இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்… சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?” என்று ஆ. ராசா பேசியிருந்தார்.

 

சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில்  நடந்த சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “தமிழ்நாடு என்ற காமராஜர் ஏற்றுக் கொள்ள மறுத்ததால் தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது” என்று சர்ச்சைக் கருத்தை கூறியிருந்தார். இது, நாடார் சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. ஆ.ராசாவை கண்டித்து, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் குறிப்பிட்ட சாதியினரை அவமதித்துப் பேசி, ஆ. ராசா சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதன்மூலம், அந்த சாதியினர் கொந்தளித்துப் போயுள்ளனர்.  தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார்.

 

அப்போது, “ஒரு பண்டாரம் பரதேசியை முதல்வராக வைத்துக் கொண்டு உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுகிறீர்கள். மத உணர்வை தூண்டுகிறீர்கள்” என்று பேசி இருக்கிறார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, பண்டாரம், பரதேசி என்று எம்.பி. ஆ.ராசா திமிராகப் பேசியிருக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ஆ.ராசா மீது அவதூறு வழக்குத் தொடர, பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருக்கிறது.

https://youtube.com/shorts/2IJ9BzGNpew?feature=share

அதே நேரத்தில், ஆ. ராசாவின் பேச்சு தமிழகத்தில் உள்ள பண்டாரம் வீரசாதியினரை, மிகவும் புண்படுத்தியுள்ளதோடு, அவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  பண்டாரம் சமுதாயத்தினரை எப்படி பரதேசி நாய்கள் என்று சொல்லலாம் என்று அவேசமடைந்த அச்சமூத்தினர், பல இடங்களில் ஆ. ராசாவுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பகுதியில் ஆண்டிபண்டாரத்தார் நலச்சங்கத்தினர்,  சிவகங்கை மாவட்டத்தில் அகில இந்திய மாமன்னர் சங்கிலி பண்டாரத்த்தார் பேரவை, திருச்சி வடக்கு மாவட்டம், உப்பிலியாபுரம் ஒன்றிய பண்டார குல மக்கள் சார்பில் நமது வெற்றிக் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆ. ராசாவுக்கு எதிராக கண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.  இது அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்துக்களையும், குறிப்பிட்ட சமூகத்தினரையும் அவமதித்து பேசியுள்ளது, திமுகவினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  ஏற்கனவே நாடார் உள்ளிட்ட பல சமூகத்தவருக்கு எதிராக ஆ.ராசா பேசியுள்ள நிலையில், குறிப்பிடத்தக்க அளவில் உள்ள பண்டாராம் சமுதாயத்தினரின் எதிர்ப்பை ஆ. ராசா சம்பாதித்துள்ளார். இந்த பேச்சுக்காக ஆ. ராசா உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்;  அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியுள்ளனர் அந்த சமுதாயத்தினர்.

சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடாமல் இருக்க வேண்டுமென்று விரும்பும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அதற்கேற்ப மக்களின் மனங்களை அறிந்து ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால், மடியில் பூனையை வைத்துக் கொண்டு சகுனம் பார்த்த கதையாக, ஆ. ராசா போன்ற அரைவேக்காடுகளை அவர் கண்டிக்கத் தவறுவதால், நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதால், திமுக கட்டிக் காத்த நற்பெயர்கள் கெட்டுவிடும் என்பதை அவர் உணர வேண்டும்.

 

அண்மையில், பிரதமர் மோடியை அவமதிப்பதாகக் கருதி, மோடி என்ற  சமூகத்தை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், அவரது எம்.பி. பதவியும் பறிபோனது. அதுபோலவே, ஆணவத்தால் ஆடும் ஆ.ராசா மீது வழக்கு தொடர்ந்து, அவருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் பாஜக மட்டுமின்றி, அவமதிப்பால் கொந்தளித்துப் போயுள்ள சமூகங்களும் தீர்மானித்துள்ளன. அப்போதாவது ஆ. ராசா திருந்துவாரா? அவர் விவகாரத்தில் திமுக தலைமை இனியாவது கடும் நடவடிக்கை எடுக்குமா? பார்ப்போம்!


வாய்த் துடுக்கால் சமூக அமைதியை சீர்குலைக்கும் நீலகிரி எம்.பி  ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பண்டார குல ஜங்கம் நல சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

திருப்பூர்கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு பண்டார குல ஜங்கம் நல சங்க மாநில தலைவர் முருகன் மற்றும் தமிழ்நாடு சீர்குலத்தோர் கூட்டமைப்பு, அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற நலச் சங்கம், யோகீஸ்வரர் சமுதாய பேரவை, தமிழ்நாடு ஆண்டி பண்டாரத்தார் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் திரண்டுவந்து, மனு அளித்தனர்.

 

மனுவில், எங்கள் சமூகத்தை இழிவாகவும், தரக்குறைவாகவும் ஆ. ராசா பேசியுள்ளார். எங்கள் சமூக மக்கள் அவ மானப்படவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு செயல் படாமல், தனிப்பட்ட சமூகத்தை தரக்குறைவாக பேசியதன் மூலம், அவர் எம்.பி., பதவிக்கு தகுதியற்றவராகிறார். எங்கள் சமுதாய மக்களை இழிவு கூறினர்.

 

அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண் டும். அவரது பேச்சுகளை நிரந்தரமாக அழிக்க வேண்டும். இல்லையேல், தமிழகம் முழுவதும் எங்கள் சமூகத்தை சேர்ந்த, 40 லட்சம் பேர் திரண்டு போராட்டம். எங்களது சமூகத்தை இழிவாக பேசியதற்கு அவர் மன்னிப்புக் கேட்ட வேண்டும்.  என்றனர். 


 

Right Menu Icon