பஞ்சாபில் நாளை மதியம் வரை இணைய சேவை முடக்கம்..!
பஞ்சாப் மாநிலத்தில் இணையதள சேவை முடக்கம் நாளை மதியம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அமிர்த சரசை சேர்ந்த அம்ரித் பால் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாளர் அமைப்பின் தலைவராக உள்ளார் சீக்கிய மத குரு என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார்.
அண்மையில் காவல் நிலையம் உள்ளே புகுந்த வாரிஸ் பஞ்சாபி அமைப்பினர் துப்பாக்கி மற்றும் வாள்களை ஏந்தி போராட்டம் நடத்தியது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. நிலைமை கைமீறி போவதை உணர்ந்த பஞ்சாப் காவல்துறை அமைப்பால் சிங்கை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
முதல் கட்டமாக அவரது கூட்டாளிகள் 78 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் 500 பேரை தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அம்ரித் பாலின் கிராமத்தில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வன்முறை பரவாமல் தடுக்க பஞ்சாபில் நாளை மதியம் வர இணையதள சேவைகள், அனைத்து எஸ்எம்எஸ் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





