பொது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு.!
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் துணை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பொன்மலை கொட்டப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் மக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அந்த வகையில் மக்களை தேடி என்ற குறைதீர் முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின் பொது மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பொது தேர்வு எழுதாத மாணவர்களை வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் துணை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





