--- --:--:-- --

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்..!

5

சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் ஊரணியில் மூழ்கி யாமினி மகேந்திரன் சந்தோஷ் ஆகிய மூன்று சிறார்கள் உயிரிழந்தனர்.

 

அதேபோல மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகேந்திரன் என்ற மாணவர் மீன் வளர்ப்பு குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். இவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon