மதிய உணவு திட்டத்தை சிறு தானியங்கள் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு..!
மதிய உணவுத் திட்டத்தில் சிறு தானியங்களை சேர்ப்பதன் மூலம் குழந்தைகளின் உணவில் சுமையையும் ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பூசாவளாகத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சிறுதானியங்களுக்கு இந்தியா புதிய அடையாளத்தை வழங்கி இருப்பதாகவும் இந்த திட்டம் ஏறத்தாழ 2 1/2 கோடி சிறு தானே விவசாயிகளுக்கு ஆசீர்வாதமாக திகழும் என தெரிவித்தார்.
சிறு தானியங்களில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் அடங்கியிருப்பதில் அடங்கி இருப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை அளிக்கக்கூடியது என தெரிவித்த பிரதமர், மதிய உணவு திட்டங்களில் சிறுதானியங்களை சேர்ப்பது நமது குழந்தைகளின் உணவில் சுவையையும் ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்கும் என்றார்.





